“போன்ல யார் கூட பேசிட்டு இருக்க”… சகோதரிகளை தரதரவென இழுத்து ரோட்டில் போட்டு அடித்த குடும்பத்தினர்….!!!

மாமன் மகன்களுடன் தங்கை பேசிய காரணத்தினால் அவரது சகோதரர்கள் கண்மூடித்தனமாக அந்த பெண்களை அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம், பிபல்வா கிராமத்தை சேர்ந்த சகோதரிகள் இருவர் தங்களது மாமன் மகன்கள் உடன் செல்போன் மூலம் பேசியிருக்கின்றன. இதனால் ஆத்திரமடைந்த அவரது சகோதரர்கள் அந்தப் பெண்களை கடுமையாக தாக்கியுள்ளனர். பெண்களின் தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி இரண்டு மூன்று ஆண்கள் கட்டையால் சரமாரியாக அடித்து சித்தரவதை செய்துள்ளனர். அந்தப் பெண்கள் தப்பிக்க முயன்றபோது விடாமல் துரத்தி அடித்துள்ளனர்.

இந்த கொடூர தாக்குதலை அப்பகுதி மக்கள் அனைவரும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தது மட்டுமல்லாமல் அதை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோவானது வைரலானது தொடர்ந்து அந்த கிராமத்து போலீசார் பாதிக்கப்பட்ட 2 பெண்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் அந்த வீடியோக்களில் பெண்களை பயங்கரமாக அடித்த அவரது சகோதரர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *