தமிழகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தின் சார்பாக ஊராட்சி மணி என்ற அழைப்பு மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வசிக்கும் பொதுமக்களும் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். இதற்கு தொடர்பு எண்ணாக 155340 என்ற எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊரகப் பகுதிகளில் உள்ள நடைமுறை சிக்கல்கள் தீர்க்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.