“போதையில் படப்பிடிப்பில் உளறிய விஜய் தேவரகொண்டா”…. ரத்து செய்யப்பட்ட படப்பிடிப்பு….!!!!!!

தனக்கு குடிப்பழக்கம் இருப்பதாக விஜய் தேவரகொண்டா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி, டியர் கம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நடிகராக உயர்ந்திருக்கின்றார். தற்பொழுது லிகர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது, எனக்கு குடிப்பழக்கம் இருக்கின்றது. ஒரு பிறந்தநாள் விழா விருந்துக்கு சென்று நன்றாக குடித்துவிட்டு வந்தேன். காலையில் படபிடிப்புக்கு செல்ல வேண்டும். போதை குறையாமல் எழுந்து படப்பிடிப்பிற்குச் சென்றேன். படத்தின் கதாபாத்திரத்திற்காகவும் குடிக்க வேண்டி இருந்தது. இதனால் எனக்கு போதை அதிகமானது. வசனம் சொல்ல வேண்டும் என்பதை மறந்து உலர ஆரம்பித்தேன். பைத்தியக்காரன் போல் சிரிக்கவும் செய்தேன். இதனால் வேறு வழி இல்லாமல் படபிடிப்பை ரத்து செய்து விட்டார்கள் என கூறியுள்ளார்.