விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சி அரசியலில் பெரும் மாற்றத்தை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் நேரடியாக அரசியல் கட்சிகளை விமர்சித்து பேசுகிறார். அவரது கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். ஆளும் திராவிட கட்சியை விமர்சித்து விஜய் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். நேற்று கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் திமுகவுக்கு எதிராக அரசியல் செய்வதால் தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரிக்க வேண்டும் என பாஜக முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. எனவே பாஜகவை விஜய் விமர்சனம் செய்தாலும் அமைதியாக இருக்க வேண்டும் என மூத்த தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. விஜய்க்கு எதிராக எதுவும் பேசக்கூடாது என டெல்லி தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.