தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், சாம், யோகி பாபு, குஷ்பு, சங்கீதா, சம்யுக்தா போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

வாரிசு படத்திலிருந்து ரஞ்சிதமே, தீ தளபதி, அம்மா சென்டிமென்ட் பாடல் போன்றவை ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. அதன்படி நாளை மாலை 5 மணிக்கு சன் டிவியின் youtube பக்கத்தில் வாரிசு படத்தின் டிரைலர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பு தற்போது தளபதி விஜய் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.