தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் துபாயில் நடைபெற்ற 24 எச் சீரிஸ் கார் ரேஸில் கலந்து கொண்ட நிலையில் இன்று போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தற்போது நடிகர் அஜித்குமாரின் டீம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. சமீபத்தில் நடந்த விபத்தின் காரணமாக அஜித் இந்த ரேஸில் கலந்து கொள்ளாத நிலையில் அவருடைய அணி இதில் கலந்துகொண்டு சிறப்பான முறையில் செயல்பட்டு மூன்றாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

மேலும் இந்த வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித் இந்தியாவின் கொடியுடன் வலம் வந்த நிலையில் ரசிகர்கள் பலரும் அஜித் அஜித் என்று உற்சாகமாக கோஷமிட்டனர். தற்போது நடிகர் அஜித்குமாருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.