போடு வெடிய…! தீபாவளி ரேஸில் அஜித், சூர்யா, கமல் படங்கள்…. ஒரே நாளில் ரிலீசாகும் 3 படங்கள்.?.. குஷியில் ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது சூர்யா 42 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சரித்திர படமாக உருவாகும் சூர்யா42 படம் மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில், ஹீரோயினாக திஷா பதானி நடிக்கிறார். அதன் பிறகு நடிகர் அஜித் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக கூறப்பட்ட நிலையில் அவர் படத்தில் இருந்து விலகி விட்டதால் மகிழ் திருமேனி ஏகே 62 திரைப்படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், ரகுல் பிரீத் சிங் மற்றும் சித்தார்த் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடபாண்டு தீபாவளி பண்டிகையின் போது சூர்யா 42, ஏகே 62 மற்றும் இந்தியன் 2 போன்ற திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ஒரே நாளில் மூன்று முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் என்ற தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சகத்தை எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.