இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே ஒரு நாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று ஒரு நாள் போட்டியின் இரண்டாவது தொடர் கட்டாக் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் 49.5 ஓவர்களில் 304 ரன்கள் குவித்தனர்.

இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் 69 ரன்களும், பென் டக்கெட் 65 ரன்களும் எடுத்த நிலையில் இந்திய அணியில் ஜடேஜா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்நிலையில் இந்தியா பேட்டிங் செய்த நிலையில் நீண்ட காலமாக பார்மில் இல்லாத ரோகித் சர்மா தற்போது அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்துள்ளார். அவர் 30 பந்துகளில் 4 பவுண்ட்ரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 50 ரன்கள் அடித்த நிலையில் இன்னும் களத்தில் இருக்கிறார். மேலும் ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.