கல்கி 2898 AD திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் உலக அளவில் சுமார் 298.5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக பட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த திரைப்படம் தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மகாபாரத கதையை பிரமாதனமான காட்சி அமைப்புகளால் எடுத்துள்ளது அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் இரண்டு காட்சிகளில் மட்டுமே வந்தாலும் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.