நாட்டின் பொதுத் துறை டெலிகாம் நிறுவனமான BSNL 5G சேவையில் இறங்கப் போவதை அறிவித்து உள்ளது. இது தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல்லுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது “BSNL அடுத்த வருடம் 5G சேவை துவங்கும் எனவும் இதற்கு TCS மற்றும் C-DOT போன்றவற்றுடன் கூட்டமைப்பு மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்து இள்ளார்.

மேலும் இன்னும் 2 வருடங்களில் ஒடிசா முழுவதும் 5G சேவை விரிவுபடுத்தப்படும் எனவும் புவனேஸ்வர் மற்றும் கட்டாக்கில் 5ஜி சேவை தொடங்கி விட்டதாகவும் அவர் கூறினார். ஒடிசாவின் 100 கிராமங்களில் 4G  சேவைக்காக 100 டவர்கள் நிறுவப்படும். தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்துவதற்கு மாநிலம் முழுவதும் 5,000 டவர்கள் நிறுவப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.