தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் அஜித் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்த துணிவு படம் கடந்த மாதம் 11-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவதோடு 250 கோடி வரை வசூல் சாதனையும் புரிந்துள்ளது. இந்த படம் கடந்த 8-ம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், பல நாடுகளில் துணிவு திரைப்படம் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது.

அதன்படி இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், சிங்கப்பூர், மலேசியா, ஓமன், மாலத்தீவு, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் ஆகிய 10 நாடுகளில் முதலிடத்தில் இருக்கிறதாம். மேலும் இதை அஜித் ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகிறார்கள்.