ஆந்திரா மாநிலத்தில் உள்ள கோதாவரி மாவட்டத்தில் சேவல் பண்டிகை நடத்தப்பட்டது. இந்த ஆண்டு 2000 கோடி ரூபாய் அளவிற்கு சேவல் பந்தயம் விமர்சையாக நடத்தப்பட்டது. இதனை பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள் பெண்களும் கண்டு களித்தனர். சூதாட்டமாக கருதப்பட்ட சேவல் சண்டை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனாலும் அரசியல்வாதிகளின் ஆதரவோடு சிலர் பகுதிகளில் சேவல் சண்டை நடக்கிறது.

போட்டியில் ஒரு சேவல் பந்தய வளையத்திற்குள் வந்து சண்டையிடாமல் வேடிக்கை பார்த்தது. வளையத்திற்குள் போட்டியிட்ட 5 சேவல்களில் நான்கு சேவல் சண்டை போட்டு மயங்கி தோல்வி அடைந்தது. அந்த சேவல்கள் போட்டியில் இருந்து வெளியேறியதும் சண்டையிடாமல் வேடிக்கை பார்த்த சேவல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த சேவலுக்கு 1.25 கோடி ரூபாய் பரிசு கிடைத்தது.