முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் நடிக்கும் வாரிசு, துணிவு படங்கள் ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக போகும் வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களுடைய பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

இதே போல் நடிகர் அஜித்தின் துணிவு பட டிரைலரும் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த இரண்டு படங்களும் ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் சிறப்பு காட்சி ஜனவரி 11-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கும், துணிவு திரைப்படத்தின் சிறப்பு காட்சி அதே தினத்தில் அதிகாலை 1 மணிக்கு திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது.