போடு செம! நடிகர் பிரபாஸ் படத்தில் இணையும் ஹிருத்திக் ரோஷன்… வெளியான வேற லெவல் அப்டேட்….!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு பிரபாஸுக்கு பாலிவுட் சினிமாவிலும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் பாலிவுட் மற்றும் தெலுங்கில் உருவாகும் ப்ராஜெக்ட் கே என்ற படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். அதன் பிறகு கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீலின் சலார், ஆதி புருஷ் போன்ற படங்களிலும் பிரபாஸ் நடித்து வருகிறார். அதன் பிறகு பதான் படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பிரபாஸ் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படம் பாலிவுட் மற்றும் தெலுங்கில் உருவாக இருக்கிறது. இயக்குனர் சித்தார்த் ஆனந்த் தற்போது கிருத்திக் ரோஷனை வைத்து ஃபைட்டர் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் முடிவடைந்த பிறகு பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் தொடங்கும். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் கிருத்திக் ரோஷன் கெஸ்ட் ரோலில் நடிக்க இருக்கிறார். மேலும் இந்த அறிவிப்பை பிரபாஸ் மற்றும் கிருத்திக் ரோஷன் இணையும் படத்தை தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply