கர்ப்பிணி பெண்மணிகளுக்காக பிரதம மந்திரி மாத்ரு வந்தனா திட்டத்தை மோடி அரசாங்கம் துவங்கியுள்ளது. இதில் கர்ப்பிணி பெண்ணுக்கு அரசு ரூ.5000-ஐ முழுமையாக வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்கவும், எவ்வித நோய் தாக்காமல் இருக்கவும் பெண்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. திட்டத்தின் கீழ் பயன்பெற கர்ப்பிணிப் பெண்களுக்கு குறைந்தபட்சமாக 19 வயது இருத்தல் வேண்டும். ஆஃப்லைன் வாயிலாக மட்டுமே இத்திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும்.

அரசாங்கம் ரூ.5000-ஐ 3 தவணைகளில் கொடுக்கும். அதன்படி, முதல் தவணையாக 1000 ரூபாயும், 2-ஆம் தவணையாக 2000 ரூபாயும், 3-ஆம் தவணையாக 2000 ரூபாயும் வழங்கப்படும். இப்பணம் நேரடியாக கர்ப்பிணி பெண்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். மேலும் விபரங்களை தெரிந்துகொள்ள https://wcd.nic.in/schemes/pradhan-mantri-matru-vandana-yojana எனும் இந்த திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்புக்கொள்ளலாம்.