போடு செம… இனிமே வாட்ஸ்அப் இப்படியும் யூஸ் பண்ணலாம்… புதிய அறிவிப்பு…!!!

கணினியில் வாட்ஸ்-அப் பயன்படுத்தும் பயனர்களுக்கு புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களை தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு பயன்படுத்தும் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்களில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களை நேரில் பார்த்து பேசி உறவாடும் காலம் ஓடிப்போய், தற்போது செல்போன் மூலமாகவே பேசிக் கொள்கிறார்கள். அதற்கு வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பல்வேறு செயல்களை பயன்படுத்துகிறார்கள்.

இந்நிலையில் கணினியில் வாட்ஸ்-அப் பயன்படுத்தும் பயனர்கள், இனி அதிலேயே வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் வாட்ஸ்அப் பயனர்கள், ஒரு வீடியோவை தனது நண்பர்கள், உறவினர்கள் அல்லது ஸ்டேட்டஸில் வைக்கும் முன்பு அதன் ஆடியோவை மியூட் செய்யும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த அதிரடி அறிவிப்பை வாட்ஸ்அப் பயனாளர்கள் இடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. இது 2021 ஆம் ஆண்டு முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்துள்ளது.