போடுங்கம்மா ஒட்டு… வாங்காதீங்க நோட்டு … ராணிப்பேட்டையில் உறுதிமொழி …!!!

நெமிலி பகுதியை சேர்ந்த பெண்கள் , தேர்தலில் அனைவரும்  கட்டாயம்  வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி, உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள் .

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெமிலி பகுதியில் 100 சதவீத  வாக்களிப்பதற்காக உறுதிமொழி  தமிழ்நாடு மகளிர் திட்டம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மகளிர் திட்ட உதவி இயக்குனரான குமார், ஊராட்சி ஒன்றிய ஆணையரான அன்பரசு மற்றும் தாசில்தாராக சுமதி கலந்துகொண்டு தலைமை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் 100 க்கு மேற்பட்ட மகளிர் குழுவினர் ,அலுவலக பணியாளர் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர்  கலந்துகொண்டனர் .

‘எங்கள் வாக்கு எங்கள் உரிமை’, ‘போடப்போறோம்  ஓட்டு- வாங்க மாட்டோம் நோட்டு’,’ 18 வயதில் வாக்கு நாட்டை பன்பட்ட தாக்கு’ போன்ற வாசகங்களை கையில் ஏந்தியவாறு இந்திய வரைபடத்தை போல நின்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள். இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையாளரான  பார்த்தசாரதி , தேர்தல் துணை தாசில்தாரான  குமார், வட்டார இயக்க மேலாளரான  டில்லி ராணி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *