போடி அருகே பல்லவராயன்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட காளை மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே பல்லவராயன்பட்டி, அய்யம்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் பிடிபடாமல் ஓடி வந்த காளை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது. இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்துக்குள்ளாக்கியது.