போங்க, கேளுங்க, சொல்வாங்க… அதிமுகவை வீழ்த்த ஸ்டாலினின் பார்முலா ..!!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் 1500க்கும் அதிகமான நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினர். அப்போது பேசிய அவர்,  திமுக மக்கள் மத்தியில் மிகுந்த எழுச்சியையும், நம்பிக்கையை ஏற்படுத்தியது. அதேபோன்றுதான் அதிமுகவை  நிராகரிப்போம் என்று   கூட்டம் நடத்த வேண்டும். இது நிச்சயம் எழுச்சியை ஏற்படுத்தும்.

இது அந்தந்த கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய கழகத்தின் செயலாளர்கள் உள்ளிட்டோர் சிறப்பாக செய்து தர வேண்டும் என்று நான் உங்களை மீண்டும் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன் .டிசம்பர் 23ம் தேதியிலிருந்து தொடர்ந்து 10 நாட்கள் உங்கள் எல்லைக்கு உட்பட்டு இருக்கும் கிராமத்திற்கு சென்று மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அந்தப் பிரச்சாரத்தை செய்யவேண்டும்.

அந்த கிராமத்தில் அதிமுகவினரை நிராகரிக்கிறோம் என்ற தீர்மானத்தை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் அதிமுகவை நிராகரிக்கும் எண்ணத்தோடு இருக்கும் மக்களிடம் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி அதற்கு தீர்மானம் நிறைவேற்றும் பொறுப்பு உங்களிடம் உள்ளது… குறிப்பாக சாலை வசதி செய்து தரப்படவில்லை, குடிநீர் வசதி கிடைக்கலை, பள்ளி செல்ல வசதி இல்லை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லை, ரேஷன் கடைகள் இல்லை கடை இருந்தாலும் பொருள்கள் இல்லை, முதியோர் பென்சன் கிடைக்கவில்லை, அரசு உதவித்தொகை வந்து சேரவில்லை இப்படி அடுக்கடுக்கான கோரிக்கைகளை கிராம மக்கள் சொல்வார்கள்.

அவை அனைத்தையும் பொறுமையாக காது கொடுத்து கேட்க வேண்டும். திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைந்ததும் இந்த கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும். குறைகள் அனைத்தும் களையப்படும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும்.  மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாக சகித்துக் கொள்ளாமல் பதில் சொல்ல வேண்டும். பத்து வருடமாக நாங்கள் ஆட்சியில் இல்லை. எனவே நாங்கள் இதனை நிறைவேற்றும் இடத்திலும் இல்லை. ஆகவே அதனை நிறைவேற்றும் பொறுப்பு எங்களிடம் ஒப்படையுங்கள்.

ஐந்து முறை திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது என்னென்ன காரியங்கள் நாங்கள் செய்து கொடுத்துள்ளோம். இந்த பகுதிக்கு என்ன செய்துள்ளோம் என்பது உங்களுக்கு தெரியும் அதனை நினைத்துப் பாருங்கள். ஆட்சியில் இல்லாத நேரத்திலும் நாங்கள் என்னென்ன பணிகளை இப்போது செய்து கொண்டிருக்கின்றோம். ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக எடுத்துக்கூற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு ஒன்றிய செயலாளர் ஊருக்கு பிரச்சாரத்திற்கு வருகிறார் என்றால் கிளை செயலாளராக இருப்பவர் மக்களை கூட்டத்திற்கு அழைத்து வர வேண்டும். உங்கள் வீட்டு திருமணத்திற்கு அழைப்பது போல் அழைக்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளரும் மனசிலும் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற உணர்வை நீங்கள் விதைக்கவேண்டும். அதிமுகவால் கடந்த 10 வருட காலம் பாலாகி போயிருக்கும் கொடுமைகளை நீங்கள் விளக்க வேண்டும். அதிமுகவிற்கு வாக்களிப்பது அவமானம் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் விதைக்க வேண்டும். இதுதான் முதல் படி அதனால்தான் 234 தொகுதியும் உங்கள் கையில் இருப்பதாக கூறினேன் என ஸ்டாலின் தெரிவித்தார்.