தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க அரசு பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளும் செயல்பட வேண்டும் என்பதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் போகோ விழிப்புணர்வு வீடியோக்களை திரையிட்டு காண்பிக்க அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியாக்கியுள்ள சுற்றறிக்கையில், போக்சோ சட்டம் 2012 விழிப்புணர்வு வீடியோக்களை, மாணவர்களுக்கு திரையிட்டு காண்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 18 வயதிற்கு கீழ் உள்ள சிறார்களிடம் அத்து மீறினால் போகோ சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.