போக்கிரி குழந்தை நட்சத்திரம்…. இப்போ எப்படி மாறிவிட்டார்…. வைரலாகும் புகைப்படம்…!!

நடிகர் கமலஹாசன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் பரத் தற்போது வளர்ந்து அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். 

தளபதி விஜய் மற்றும் அசின் நடிப்பில் வெளியான போக்கிரி திரைப்படத்தில் நடிகை அசினுக்கு தம்பியாக நடித்து பிரபலமானவர் நடிகர் பரத். இவர் உலக நாயகன் கமலஹாசன் நடித்து 2002ஆம் வருடம் வெளிவந்த பஞ்சதந்திரம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர் பிறந்தது தமிழ்நாடு. அதன் பின்பு சென்னையில் இருக்கும் வேளாங்கண்ணி இன்டர்நேஷனல் பள்ளியில் படித்துள்ளார். அப்போதே கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பாராம். அதிலிருந்து நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டு பல படங்களில் நடித்து பிரபலமானார்.

இவர் தற்போது ஆள் அடையாளம் தெரியாமல் வளர்ந்து கதாநாயகன் போல  மாறியிருக்கிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் கமல், தளபதி விஜய் அல்லு அர்ஜுன் ஆகியவர்களுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். மேலும் தன் அம்மாவுடன் தான் இருக்கும்  புகைப்படத்தை பற்றியும் அதில் பேசியுள்ளார்.