“பொறியியல் நேரடி 2-ம் ஆண்டு”….. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

டிப்ளமோ முடித்தவர்கள் பொறியியல் இரண்டாம் ஆண்டில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தொழில் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் டிப்ளமோ முடித்தவர்கள் நேரடியாக பொறியியல் இரண்டாம் வகுப்பில் சேரலாம் என்று அறிவித்திருந்தது.இந்த நிலையில் டிப்ளமோ படித்தவர்கள் பொறியியல் இரண்டாம் வகுப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்ப கழகம் அறிவித்துள்ளது.

விருப்பமுள்ள மாணவர்கள் https://www.ptbe.tnea.com/என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதில் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் 0422-2590080 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பாலிடெக்னிக் படித்த பல மாணவ மாணவிகள் நேரடி பொறியியல் இரண்டாம் வகுப்பு படிக்க விண்ணப்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *