பொறியியல் கலந்தாய்வு…. தவறாமல் கலந்து கொள்ளுங்கள்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் +2 முடித்த மாணவர்கள் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு கடந்த மே 5 ஆம் தேதி முதல் ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. ஜூலை 2ஆம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும். பி.இ, பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஜூலை 2ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவர்கள் https://www.tneaonline.orghttps://www.tndte.gov.in ஆகிய இரண்டு இணைய தளங்களில் விண்ணப்பிக்கலாம்.  பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜுலை 7ஆம் தேதி தொடங்கும்.

இந்நிலையில் இதில், விண்ணப்பித்துள்ள விளையாட்டு வீரர்களுக்கான முதல்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 5 முதல் 14 வரை நடைபெறும் என கலந்தாய்வு மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது. மேலும், அசல் மற்றும் நகல் சான்றிதழ் உடன் தேவையான படிவங்களை கொண்டு வர வேண்டும் எனவும் குறிப்பிட்ட தேதியில் மாணவர்கள் தவறாமல் கலந்து கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply