பொருட்கள் வாங்குவதற்காக…. கடைகளில் மக்கள் கூடுவதை தடுக்க வேண்டும்…. டிடிவி தினகரன்…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே  தமிழகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கிய நிலையில் தமிழகத்தில் வருகிற ஜூலை 10 ஆம் தேதி முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி சில கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் மக்கள் தேவை இல்லாமல் வீட்டை விட்டு  வெளியே சென்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே திங்கள்கிழமை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் மக்கள் தங்களை தயார்படுத்திக்கொள்வதற்காக இந்நிலையில் இன்றும் நாளையும் 24 மணி நேரமும் போக்குவரத்து இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கூடுதல் விலையில் பொருட்கள் விற்கப்படுவது தடுப்பதற்கு முறையான கண்காணிப்பு மேற்கொள்வது அவசியமாகும். மேலும் கடந்த முறை போல அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மக்கள் கடைகள் கூடுவதை தடுப்பதற்கு முறையான வழிகாட்டுதல்கள் வழங்குவதோடு, எந்த பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படாமல் தமிழக அரசு பார்த்துக்கொள்ள வேண்டுமென்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *