தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினும் அமைச்சர் உதயநிதியும் தோல்வி பயத்தில் உள்ளதாக இபிஎஸ் கூறியுள்ளார்.

சோளிங்கரில் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், மூன்று ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு திமுக செய்தது என்ன? மூன்று லட்சம் கோடி கடன் மட்டுமே அரசு வாங்கியுள்ளது. விலைவாசி விண்ணை மட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. பொய் பேசுவதற்கு நோபல் பரிசு அறிவித்தால் அது முதல்வர் ஸ்டாலினுக்கு தான் கிடைக்கும் என விமர்சித்துள்ளார்.