பொன் ராதாகிருஷ்ணன் இல்ல…. இனி இப்படி கூப்பிடுங்க – ஸ்டாலின்

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் முக ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மேலும் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், “பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களை பொன்ராதாகிருஷ்ணன் என்று கூறக்கூடாது, அவரை அதற்கு பதிலாக “பொய் ராதாகிருஷ்ணன்” என்றுதான் கூறவேண்டும் என்று விமர்சித்து பேசியுள்ளார்.