பொன்னியின் செல்வன் படம் எப்படி….? கோலிவுட் முதல் பாலிவுட் பிரபலங்கள் சொல்ல வருவது என்ன?…!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னிய செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியன் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் இது இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இந்தப் படத்திற்கு திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அதன்படி டைரக்டர் சுப்புராஜ் தனது twitter பக்கத்தில், பொன்னின் செல்வன் ஸ்பெஷல்பவுண்ட்…. மைண்ட் ஃப்ளோயிங்…. மாஸ்டர் பீஸ்!!! இந்திய சினிமாவுக்கும் மகுடம் என்று தெரிவித்துள்ளார்.

அதனைப் போல நடிகர் துல்கர் சல்மான் டிவிட்டர் பக்கத்தில், பொன்னியின் செல்வன் குறித்து மிக அற்புதமான விஷயங்களை கேட்பது. படத்தில் குடும்பம் ஒன்றும் பல நண்பர்கள் இருப்பது தனிப்பட்ட வெற்றியாக உணருகிறது. ஒரு சிறந்த டீம் என்று தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அபிஷேக் பச்சன் தனது மனைவி ஐஸ்வர்யாவின் படத்திற்கு வாழ்த்துக்களை பகிர்ந்து உள்ளார். இது குறித்து ட்விட்டரில், “இறுதியாக நாள் வந்துவிட்டது இன்று திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் பல வருடங்கள் கடின உழைப்பு மற்றும் சிறந்த படைப்பை உருவாக்கிய குழுவிற்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். டைரக்டர் பொன்ராம் வெளியிட்டுள்ள ட்விட்டரில், கடைசியாக நான் பொன்னியன் செல்வன் திரையரங்கில் பார்த்தேன். இறுதியாக இதை செய்த லெஜென்ட்& டைரக்டர் மணிரத்தினம் சார் மற்றும் ஒட்டுமொத்த பொன்னியின் செல்வன் குழுவினருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.