கேரள மாநிலத்தில் பொது இடங்கள் மற்றும் ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் குப்பையை கொட்டுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. இருந்தாலும் இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் குப்பை மற்றும் கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டி செல்கின்றன. இந்நிலையில்பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களை பற்றி துப்பு கொடுத்தால் 2500 ரூபாய் பரிசு வழங்கப்படும் என கேரளா அரசு அறிவித்துள்ளது. குப்பை கொட்டுபவர்களுக்கு 250 ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இதை தமிழகத்திலும் கொண்டு வரலாமே என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.