ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பழனிபேட்டை, வெங்கடேசபுரம், கிருஷ்ணாம்பேட்டை ஆகிய பகுதிகளில் அரக்கோணம் டவுன் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வெங்கடேசபுரம் பேருந்து நிறுத்தத்தில் ஒருவர் உருட்டுக்கட்டையுடன் நின்று கொண்டிருந்தார். அவர் அந்த வழியாக செல்லும் பொது மக்களை அச்சுறுத்தியுள்ளார்.

இதனால் போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த கரன்(21) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் கரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.