பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு….. அரசு வெளியிட்ட செம சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது பாதிப்பு படிப்படியாகக் குறைந்துள்ளதால் இந்த வருடம் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று கொண்டுள்ளது. 11 ஆம் வகுப்புக்கு வருகிற 31-ந் தேதியும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 30ஆம் தேதியும் தேர்வுகள் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் இந்த வருடம் விரைவில் தேர்வு முடிவுகள் வெளியிட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

அதன்படி தற்போது தேர்வுகள் முடிவடைவதற்குள் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி எப்போது தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 12 மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் 2 முதல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆசிரியர்கள் விடைத்தாள்களை எந்தவித இடையூறும் இல்லாமல் இருக்க பல்வேறு சலுகைகளை அரசு தேர்வுகள் இயக்கம் வழங்கி வருகிறது. அந்தவகையில் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் அவர்கள் இருக்கும் பகுதிக்கு பக்கத்தில் உள்ள மையத்திற்கு சென்று விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளதால் ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.