பொதுத்தேர்வு: பிப்ரவரி 10க்குள் மாணவர்கள் பெயர் திருத்தம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வ அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரையும், பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு தமிழகத்தில் சுமார் ஒன்பது லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களது பெயர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவரும் தேர்வு எழுதும் மாணவ மாணவர்களின் ஆலோசனைப்படி  பிப்ரவரி  10ம் தேதி வரை பெயர் பட்டியலில் மாற்றங்களை செய்யலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.