பொதுத்தேர்வு கட்டணம்…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பிப்ரவரி 4 வரை கால அவகாசம்…. தேர்வுத்துறை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை பொது தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்த தேர்வை மொத்தம் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ள நிலையில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. மேலும் பொது தேர்வு எழுத உள்ள மாற்றுத்திறனாளிகள்,தமிழ் வழி மற்றும் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தனியார் பள்ளி மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்வு கட்டணத்தை ஜனவரி 20ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது பொது தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் பிப்ரவரி நான்காம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தனியார் பள்ளிகள் https://dge1.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தேர்வு கட்டணத்தை செலுத்தலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply