பொதுச்செயலாளரான இபிஎஸ்…. அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்…..!!!!

எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தலைமை கழகம் அறிவித்துள்ளது. பொதுச்செயலாளர் பதவிக்கு யாரும் வேட்பு மனு  தாக்கல் செய்யாத நிலையில் அவை தலைவர் பெயரில் அறிவிப்பு வெளியானது. இந்த தேர்வுக்கான வெற்றி சான்றிதழ்களை  தேர்தல் ஆணையர்களான நத்தம் விஸ்வநாதன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் இபிஎஸ் இடம் வழங்கினர். அதிமுக அலுவலகம் சென்று பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையின் ராமநாதபுரத்தை சேர்ந்த அமமுகஉறுப்பினர்கள் பலர் கட்சியிலிருந்து விலகி இபிஎஸ் முன்னிலையில் நேற்று அதிமுகவில் இணைந்துள்ளனர். இபிஎஸ் அதிகாரப்பூர்வமாக பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் கட்சியை மேம்படுத்தும் நடவடிக்கையாக புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என அறிவித்திருந்தார். அதனால் தற்போது அமமுகவை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட தொண்டர்கள் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.