பொதுக்குழுவுக்கு அனுமதி வேண்டாம் …! இது உயிர் சம்மந்தப்பட்ட விஷயம்… அதிமுகவுக்கு புது சிக்கல் …!!

செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி, அதிமுக பொதுக்குழுவால் கூட்டம் அதிகமாக சேர்ந்து, கொரோனா அதிகமாக, வேகமாக பரவி, இந்த தலைவலி வரும்னு சொல்லி தான்… அதிக கூட்டம் இருக்க கூடாதுன்னு சொல்லி தான் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரும்,  வேலூர் மாவட்ட காலெக்டரும், கோயம்புத்தூர் கலெக்டரும் தற்போது கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துறாங்க.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பண்ணல. அதைத்தான் நான் சொன்னேன். திருப்பி நேற்றே நான் லெட்டர் எழுதிட்டேன்.நான் மறுபடியும் சொல்றேன் இந்த கூட்டத்தை சேர்க்க விடாதீங்க. நான் பொலிட்டீஸியனாக கேட்கல. தனிப்பட்ட மனிதனாக, வாக்காளராக  கேக்குறேன். ஆகவே தயவு செய்து இந்த கவர்மெண்ட் முடிவு எடுக்க வேண்டும்.

உயிருக்கு பாதுகாப்பு வேணுமில்லையா,  அதை செய்யுங்கன்னு சொல்லி லெட்டர் திருப்பி ரிமைண்ட் பண்ணி அனுப்பிச்சாச்சு. இதுக்கு மேல அரசு கவனமாக இருக்கும்னு நினைக்கிறேன். முதல்ல அந்த லிஸ்டில் இருக்கிறவர்கள் எல்லாம்…..  வீட்டில் இருக்கிறவங்க எல்லாம் கேர்ஃபுல்லா இருங்க.

எப்படி எடப்பாடி தனிமைப்படுத்திட்டார்.. அரசியலை விட்டு விடுங்கள். அரசியலும் இது வேண்டாம். பொதுவாக ஒரு தனிப்பட்ட ஆளா எடுத்துக் கொள்ளுங்கள். கொரோனா பரவுது கூட்டத்தை சேக்காதுன்னு சொன்னா,  அது எப்படி கவர்மெண்ட் வேடிக்கை பாக்கும்னு எனக்கு தெரியல. இன்னைக்கு ஒரு லட்சம் மருத்துவ முகாம் நடத்துறேன்னு சொல்லி,  அடுத்த நாளே நான் 3000 பேரை கூட்டமாக அனுமதிப்பேன் என்றால் எப்படி ?

கடலோரமா போய் இடம் தேடுறாங்களாம். யாரும் சரியாக வரவில்லை என்றால் சிவி சண்முகம் யாரையாவது படிச்சு கடல்ல போய் தள்ளிடுவாரு. கடல் பக்கத்துல இருக்கு பாருங்க ஈசியா இருக்கும். இங்க இருந்து ஈசிஆர்ல தேடிட்டு இருக்காரு, இதுதான் நடக்குது.

ஆகவே என்னுடைய பொதுவான கருத்து…  மக்களுடைய நலன் கருதி,  இந்த கொரோனா இருக்கின்ற நேரத்தில் கூட்டம் போடுவது என்பது சட்டத்திற்கு புறம்பானது. நீங்களே பரப்பி விட்டுவிடுவீர்கள் ஆகவே இந்த மாண்புமிகு தமிழக முதல்வர் ஒரு நல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *