நடப்பு ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு ரூபாய். 1000 ரொக்க பணம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு ஆகியவை வழங்க இருக்கிறது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு எந்த தேதி வரையிலும் வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

அதாவது, தமிழகத்தில் 2 கோடியே 19 லட்சத்து 14 ஆயிரத்து 73 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான டோக்கன்கள் நேற்று முன்தினம் முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை வரும் 9-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 9-12 ஆம் தேதி வரையிலான 4 நாட்களில் பொங்கல்பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. அவ்வாறு  12ஆம் தேதிக்குள் பெற முடியாதவர்கள் மற்றும் வெளியூரில் வசிப்பவர்கள், விடுபட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு 13-ஆம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அவர் கூறினார்.