தமிழர்களின் மிக முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை இந்த வருடம் ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த வருட பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருகிறது. திங்கள்கிழமை மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக பொங்கல் பண்டிகைக்கு ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அவர்களுக்கு சிறப்பு பேருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சிறப்பு பேருந்துகள் நாளை முதலே இயக்கப்பட உள்ளது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகை வார இறுதி நாட்களில் வந்திருப்பதால் மக்கள் நலன் கருதியும், ஊருக்கு செல்பவர்களுக்கு வசதியாகவும், ஒரே சமயத்தில் பலரும் சொந்த ஊருக்கு செல்வதை தவிர்ப்பதற்காகவும் வெள்ளிக்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதுவரை வெள்ளிக்கிழமை விடுமுறை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் ஒரு வேலை விடுமுறை அறிவிக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டால் அது குறித்து முன்கூட்டியே அறிவித்தால் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு உதவியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படுகிறது.