தமிழ்நாடு முழுவதும் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து மக்களாலும் சாதி, மத, பேதமின்றி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்திலும் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது கோல போட்டிகள் மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பறை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது அமைச்சர் பொன்முடி மேடையில் நடனம் ஆடினார். மேலும் அமைச்சர் பொன்முடி நடனமாடியது அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.