சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தினமும் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லாரிகள் மூலமாக காய்கறி மற்றும் பழங்கள் விற்பனைக்கு வருகிறது. இதனை திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து மொத்தமாக காய்கறிகள், பழங்களை வாங்கிச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு புதன்கிழமை பொங்கல் பண்டிகை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகர், துணைத்தலைவர் எம்.டி தியாகராஜன் போன்றோர் கூறியதாவது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதன்கிழமை கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில் பணி செய்து வரும் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றிருப்பதால் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.