பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு மாதவி ரோடு அம்மன் நகரில் சுரேஷ்- சாந்தினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் சுரேஷ் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருவதால் சாந்தினி தனது 5 வயது பெண் குழந்தையுடன் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சாந்தினி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதனை அடுத்து சாந்தினியின் வீட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பின் சாந்தினி வீட்டிற்கு வந்து பார்த்த போது மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 5 ஆயிரம் ரூபாய் பணம், வெள்ளி அரைஞாண் கொடி போன்றவற்றை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சாந்தினி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *