பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை திட்டம் தொடரும்…. அமைச்சர் உறுதி…!!!!!!

பொங்கலுக்கு வேட்டி சேலை வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வேட்டி சேலை  வழங்கும் திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்தவும் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தியும் விசைத்தறி நெசவாளர் கூட்டமைப்புகள் உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்கள் நடத்துவதாகவும் மற்றும் இந்த திட்டத்தினை அரசு கைவிட உத்தேசத்திருப்பதாகவும் சில பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக அரசு நிலைப்பாடு பின்வருமாறு வேட்டி சேலை வழங்கும் திட்டம் தமிழக அரசினால் 1983 ஆம் வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட சீரிய திட்டங்களில் ஒன்றாகும். பொங்கல் பண்டிகையின் போது கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலை வழங்குபொருட்டும் ஒவ்வொரு வருடமும் வேட்டி சேலை வழங்கும் திட்டத்தில் தமிழக அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த திட்டத்திற்கு தேவையான மொத்த சேலைகள் மற்றும் வேட்டிகள் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட ஏதுவாக வருவாய் துறைக்கு வழங்கப்படுகின்றது.

இந்த திட்டத்தின் கீழ் 2,264 கைத்தறி நெசவாளர்கள், 11, 124 பெடல் தறி நெசவாளர்கள் மற்றும் 41,983 விசைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை உறுதி செய்வது மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் வசிக்கும் 3.59 கோடி மக்களுக்கு பயன் அளிக்கின்றது. ஒவ்வொரு வருடமும் விலை இல்லா சீருடை வழங்கும் திட்டத்திற்கான உற்பத்தி நிறைவடைந்ததுடன் வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை தொடங்குவதற்கான கொள்கை அளவிலான அரசாணைகள் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் வெளியிடப்பட்டு வேட்டி சேலை உற்பத்திக்கு தேவையான நூல் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த புள்ளி நடைமுறைகள் துறையால் மேற்கொள்ளப்படுகின்றது.

நடைபாண்டில் பொங்கல் 2023 ற்கு  வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் தொடர்ந்து செயல்படுத்திட அரசின் கொள்கை அளவிலான ஆணைகள் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இந்த திட்டத்திற்காக 2022 – 23 ஆம் நிதி ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் ரூபாய் 487.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *