பையை சுற்றி வந்த தெருநாய்கள்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை…!!

துணிப்பையில் இருந்து பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம்மாள் நகர் முன்பு புங்கமரம் ஒன்று உள்ளது. இந்த மரத்திற்கு அடியில் பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை துணிப்பையில் வைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் தெருநாய்கள் பையை சுற்றி வந்ததால் சந்தேகமடைந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது பையில் பெண் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குழந்தையை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குழந்தையை விட்டு சென்ற நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *