
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவர் பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்ந்து சூர்யா என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இருவரையும் மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர்.
அப்போது முருகானந்தம் போலீசாரை ஏமாற்றிவிட்டு தப்பி ஓடி உள்ளார். தப்பி ஓடிய முருகானந்தத்தை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். விசாரணை கைதி தப்பிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.