பேஸ்புக்கில் ஏன் இப்படி காட்டுனீங்க ? அமெரிக்கா எம்பிக்கள் கடிதம் …!!

அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ – பைடனுக்கு வெற்றி சான்றிதழ் கொடுக்கும் போது நடந்த வன்முறை தொடர்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்கரிடம் அமெரிக்க எம்பிக்கள் விளக்கம் கேட்டுள்ளனர்.

அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி வெற்றி பெற்றார். அவருக்கான வெற்றி சான்றிதழ் வழங்க அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் நடைபெற்ற போது தோல்வியடைந்த முன்னாள் அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்.இந்த சம்பவம் நடந்த சமயத்தில் பேஸ்புக்கில் துப்பாக்கி போன்ற விளம்பரங்களை காட்டியதாக தெரிகிறது. மேலும் தேர்தலுக்கு எதிராக கருத்துகள் பரவியதாக தெரிகிறது.

இது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதற்கு ஜனநாயக கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் ஃபேஸ்புக்கில் வன்முறைக்கு ஆதரவாக துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வாங்குவது போன்ற விளம்பரங்கள் வந்தது குறித்து விளக்கம் கேட்டு 23 எம்பிக்கள் பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்குக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இவ்வாறு விபம்பரம் காட்டுவது ஆபத்தானது. இது வன்முறையை ஊக்குவிக்கும். எனவே இதற்கான காரணம் என்ன என்பதை சொல்ல வேண்டுமென்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *