பேருந்து நிறுத்தத்தில் கிடந்த தொழிலாளி…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள மணியங்காளிப்பட்டி புது காலனியில் கூலித் தொழிலாளியான முருகேசன்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி(50) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான முருகேசன் அடிக்கடி பணம் கேட்டு தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது விஜயலட்சுமி பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த முருகேசன் மதுவில் விஷம் கலந்து குடித்து அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் மயங்கிக் கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் முருகேசனை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *