அமெரிக்காவில் உள்ள மத்திய ஃப்ளோரிடோவில் விவசாய தொழிலாளர்களை ஏற்றி சென்ற பேருந்து ஒன்று சென்றது. இந்தப் பேருந்து திடீரென நிலைத்தடுமாறி சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு டிரக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய பேருந்து சாலை தடுப்பை உடைத்து ஒரு வயல்வெளியில் விழுந்து கவிழ்ந்தது.

இந்தக் கோர விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.