பேருந்தில் இலவச பயணம்…. பெண் வேடமணிந்து பயணம் செய்த யூடியூப்பர்…. வைரல்…..!!!!

பேருந்தில் ஏறி இலவச பயண சீட்டை நடத்துனரிடம் பெற்றுக்கொண்டு அந்த நடவடிக்கைகளை ரகசிய கேமராக்களின் மூலம் படமாக்கியிருக்கிறார் கன்னியாகுமரியை சேர்ந்த இளைஞரொருவர். இலவச பேருந்து பயணத்திற்காக பெண் வேடம் அணிந்து பயணம் செய்யும் குறும்படம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக அரசு பெண்களுக்கு இலவச பயணம் செய்ய அறிவித்திருந்தது. பல பெண்கள் அந்த இலவச பயணத்தை பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த யூடியூப் சர்ஜின் என்ற இளைஞர் ஒரு குறும்படத்தை எடுத்துள்ளார். அந்த குறும்படத்தில் சச்சின் இலவசமாக பயணம் செய்யும்போது நடத்துனர்,ஆண்களின் நடவடிக்கை ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் ஆண்களுக்கு இலவச பயணம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையிலும், இந்தப் படம் அமைந்துள்ளது.

இந்தக் குறும்படத்தில் சர்ஜின் முழு முகசவரம் செய்து, புடவை அணிந்து, பெண் வேடத்தில் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்து, பேருந்தில் ஏறி இலவச பயண சீட்டை நடத்துனரிடம் பெற்றுக்கொண்டு அந்த நடவடிக்கைகளை ரகசிய கேமராக்கள் மூலமாக படமாக்கி 2 நிறுத்தம் தாண்டியதும் நான் பெண்ணல்ல ஆண் என்று நடத்துனரிடம் கூறி பணம் கொடுத்து பயணச் சீட்டை பெற்றுக் கொண்டு பேருந்திலிருந்து இறங்கி விட்டார்.

இதையடுத்து மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் திடீரென்று நடனம் ஆடியும், புல்லட் ஓட்டியும், பொதுமக்களின் ரியாக்சன் எப்படி இருக்கும் என்பதை 12 நிமிடங்களுக்கு வீடியோவாக அந்தப் படத்தில் பதிவு செய்துள்ளார். அந்தக் குறும்படம் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பல வரவேற்புகளையும் பெற்று வருகிறது. பெட்ரோல் விலை உயர்வை சுட்டிக்காட்டி நுங்கு வண்டி ஓட்டி உருவாக்கிய குறும்படம் உட்பட பல குறும்படங்கள்  வைரலாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *