தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த டெல்லி கணேஷ் நேற்று இரவு உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். அவருடைய உடல் சென்னையில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் டெல்லி கணேஷ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். அதாவது டெல்லி கணேஷ் மறைவு தமிழ் திரையுலகுக்கு பேரிழப்பு. அவருடைய பிரிவால் வாடும் திரையுலக நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் இன்றளவும் தான் நடித்த காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்க்க வைத்தவர் டெல்லி கணேஷ் என்று உருக்கமாக இரங்கல் தெரிவித்தார்.