பேரறிவாளன் விடுதலை: “வென்றது நீதியும், அற்புதம் அன்னையின் போர்க்குணமும்”… நடிகர் கமல்ஹாசன்….!!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 வருடங்களுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளன், தன்னை விடுவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் அவரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இத்தீர்ப்புக்கு பேரறிவாளனுடைய குடும்பத்தினர் மற்றும் அரசியல் தலைவர்கள் என்று பலரும் வரவேற்று பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில், “ஆயுள் தண்டனையைக் காட்டிலும் நீண்ட 31 வருடங்கள் ஆகும். ஆகவே இப்போதேனும் முடிந்ததே என்று மகிழ்கிறோம். பேரறிவாளனுக்கான அநீதியில் அரசுகள் பந்து விளையாடிய சூழ்நிலையில், நீதிமன்றமே முன்வந்து விடுதலை செய்து இருக்கிறது. தற்போது வென்றது நீதியும், அற்புதம் அன்னையின் போர்க்குணமும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *