பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள முடியாத நண்பனுக்காக தோழர்கள் செய்த செயல் அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைக்கிறது. நண்பனின் போட்டோவை பேனராக ரெடி பண்ணி பட்டம் வழங்குவது போல் செய்த நண்பர்களின் வீடியோவை பார்த்த இணைய வாசிகள் அழகான நண்பர்கள், அற்புதமான நினைவுகளை உண்டாக்குவார்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.