பேடிஎம் Wallet-ல் இருந்து வங்கி கணக்குக்கு பணம் மாற்றுதல்… எப்படி தெரியுமா?…. இதோ வழிமுறைகள்….!!!!

இணைய வங்கியை பயன்படுத்தாமல் நேரடியாக பேடிஎம் Walletல் உள்ள பணத்தை வைத்து கட்டணங்கள் செலுத்த இயலும். அதே சமயத்தில் அந்த Wallet-ல் உள்ள பணத்தை உங்களது வங்கிக்கணக்குக்கும் மாற்றிக்கொள்ள முடியும். தற்போது பேடிஎம் Walletல் இருந்து வங்கிகணக்குக்கு பணம் மாற்றுவது எப்படி என்பது குறித்து இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். அதாவது, உங்களது ஸ்மார்ட் போனில் பேடிஎம் செயலியை திறக்கவும்.

அச்செயலி உங்களிடம் இல்லையெனில் ஆப்பிள் ஆப் ஸ்டோர் (அ) கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து செயலியை பதிவிறக்கம் செய்யலாம். அவற்றில் MY Paytm பிரிவின் கீழ் Wallet ஆப்சனை கிளிக் செய்யவேண்டும். அதன்பின் ஸ்கிரீன் மேற் புறத்தில் கிடைக்கும் வங்கி விருப்பத்துக்கு ஏற்ப பரிமாற்ற ஆப்சனை கிளிக் செய்யவேண்டும். நீங்கள் மாற்ற விரும்பும் தொகையை உள்ளிட்டு கன்டினியூ கொடுக்கவேண்டும். பிறகு உங்களது கணக்கு எண், ஐ.எஃப்.எஸ்.சி குறியீடு மற்றும் கணக்கு வைத்திருப்பவரின் பெயரை உள்ளிட்டு கன்டினியூ ஐகானை கிளிக் செய்யவேண்டும்.

உங்களது மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP-ஐ உள்ளிட்டு மேலும் சரிபார்ப்பு வழிமுறைகளை கடைபிடிக்கவும். கடைசியில் அனைத்து பணபரிமாற்ற விபரங்களும் உங்கள் திரையில் காண்பிக்கப்படும். பரிவர்த்தனை முடிந்தவுடன் பெறுநரின் வங்கிக்கணக்கு விவரங்கள் பேடிஎம் வாலட் பிரிவில் சேமிக்கப்படும். இது பயனாளர்கள் எதிர் காலத்தில் மீண்டுமாக பணத்தை அனுப்ப வேண்டுமானால் விரைவில் அனுப்ப உபயோகமாக இருக்கும்.